(நூருல் ஹுதா உமர்) தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதி உதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையானது அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத் தேவையான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (Turkish Cooperation and Coordination Agency – TIKA) நிறுவனத்திடமிருந்து வைபவரீதியாக பெற்றுக்கொண்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் TIKA நிறுவனத்திற்கும் இடையேயான இந்த கூட்டு முயற்சி, இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இந்த உபகரணங்கள் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், சவால்களைத் தீர்க்கவும் உதவும். இந்த கூட்டு முயற்சியின் வெற்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை என்று இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.