( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் போலீஸ் பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரத்தில் 300 மில்லி லிட்டர் அரச சாராயத்தினை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கல்முனை மதுவரி திணைக்கள பொறுப்பு அதிகாரி பிரசாந்த் அவர்களால் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் (7) வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.சந்தேகநபர் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதற்கு அமைவாக 50,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் தவறினால் ஆறு மாதம் கடூழிய சிறைத்தண்டனை என்று அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் தெஸிமா கஜீவன் கட்டளை பிறப்பித்தார்.