( வாஸ் கூஞ்ஞ) இலங்கை மத்தியவங்கியின் அனுசரனையுடன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது ,
இத்துடன் உற்பத்திக்கான மூலதனங்களை எவ்வாறு கிராமிய வங்கிகளுக்கு ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என்ற வழிகாட்டல்கள் கொண்ட கருத்தமர்வு புதன்கிழமை (06) மன்னாரில் இடம்பெற்றது.
இதில் பல கிராமங்களைச் சேர்ந்த 25 பலவித கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் கலந்து கொண்டனர்.
மெசிடோ நிறுவன மன்னார் பணிப்பாளர் யட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண மத்திய வங்கியின் கிளை உதவி முகாமையாளர் திருமதி மாலினி அச்சுதன் , இலங்கை கைத்தொழில் அதிகார சபையின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் லெம்பேட் , மெசிடோ நிறுவனத்தின் கள ஒருங்கிணைப்பாளர் விவேகி மற்றும் விரிவுரையாளராக எம்.ஏ.பௌர்சாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.