இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயனுள்ள மானிய முன்மொழிவு எழுதுதல் மற்றும் Turnitin   சம்பந்தமான செயலமர்வு.

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக அறிவியல் மற்றும் மனித நேயங்களுக்கான ஆராய்ச்சி மையம் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கலை கலாசார பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
பயனுள்ள மானிய முன்மொழிவு எழுதுதல் மற்றும் Turnitin சம்பந்தமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.