சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி  சாதனை.

(கனகராசா சரவணன்)   மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய  தமிழ்செல்வன் அஷ;தா என்ற மாணவி 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில்  பி.எம்.எச்.இல் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அஷ;தா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த சர்வதேச போட்டி கடந்த 3ம் திகதி மலேசியாவில் 80 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்றபட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில் 6 வயதுடைய அஷ;தா போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளாh.;

செங்கலடி மத்தியமகாவித்தியாலயத்தில்  தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியும் மாமாங்கம் யுசிமாஸ் மனக்கணக்கு கல்வி நிலையத்தில் கற்றுவரும் இவர் செங்கலடியைச் சேர்ந்த தமிழ்செல்வன் நிதர்சினி தம்பதிகளின் மூத்த புதல்வியுமாவார்.