ரணில், மோகன் சந்திப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவரும், ரணில் 2024 செயலணி தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களுக்குமான சந்திப்பு 6.12.23 ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது க.மோகன் அவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான வீடுகளை புனரமைக்க தலா 150,000/= மலசல கூடங்களை புரைமைக்க 50000/= வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முற்கட்டம் 150 வீட்டு பயனாளிகளும், 300 மலசல கூட பயனாளிகளும் பயனடைவர் அடுத்த வருடம் ஜனவரி நடுப்பகுதியில் செயற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் நாட்டுக்கு தொழில்பெற 50 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது டிசம்பர் கடைசிக்கு முன்னதாக பயண ஒழங்குகளும் ஏற்பாடாகி உள்ளது.