கல்வியில் SYSTEM CHANGE செய்ய எம்மால் முடிந்தாலும் பாராளுமன்றத்தில் SYSTEM CHANGE செய்ய முடியவில்லை.

எதிர்பார்க்கும் மாற்றத்தை எதிர்க்கட்சி ஏற்படுத்தினாலும், பாராளுமன்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும்,சிறந்த, நல்லொழுக்கமான,பண்பான, நற் சொற்களை கொண்டு ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ உரையாற்றினால் பாராளுமன்றத்திலுள்ள ஒரு சிலர் முட்டாள்,கழுதை என்ற பொருத்தமற்ற சொற்களை கொண்டு பதிலளிப்பதாகவும், அவர்களின் சொற்களஞ்சியத்தில் இது போன்ற வார்த்தைகளே இருப்பதால் இந்த சொற்களை கொண்டே தானும் பதிலளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சாதாரண தரம் வரை மாத்திரம் கற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள், பாராளுமன்ற நூலகத்தில் புத்தகங்கள்,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை வாசித்தே ஆங்கில மொழியை கற்றதாகவும்,ஐக்கிய நாடுகள் சபையுடன் நடந்த நேர்காணலை பார்ப்பதன் ஊடாக அதன் உண்மை தன்மையை கண்டுக்கொள்ள முடியும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தி கல்வி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் பாராளுமன்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் 52 ஆவது கட்டமாக வட கொழும்பு புனித அந்தோனியார் சிங்களக் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் இன்று (07) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கொள்கைகள் மற்றும் சட்டங்களைத் தயாரிக்கும் பாராளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும் என்றும்,அது சான்றிதழுக்கு மட்டுப்படுத்தாமல் செயற்பாட்டின் மூலம் விருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் குறைந்து ரோபோ இயந்தரங்கள் வரக்கூடும் என்பதால் எதிர்காலத்தில் புத்திசாலித்தனமும்,புதிய தொழிநுட்ப முறைகளை புரிந்து கொண்டவர்களுக்கு மாத்திரமே நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்றும்,அந்த புதிய உலகிற்கு 41 இலட்சம் மாணவர்களை வழிநடத்துவதற்குத் தேவையான வழிகளை தயார் செய்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் இலக்காகும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 52 அரச பாடசாலைகளுக்கு 487 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.