பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டமைக்கு 2 வருட  கடூழிய சிறைத்தண்டனை.

( வி.ரி. சகாதேவராஜா)   பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் கணக்கில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபருக்கு அக்கரைப்பற்று நீதவான் எம் எச் எம். ஹம்சா இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்தார்.
குறித்த பெண்ணினால் இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக அச்சந்தேக நபரை  கைது செய்து அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
 வழக்கு விசாரணைகளின் போது குற்றத்தை ஏற்றுக் கொண்ட சந்தேகநபருக்கு இன்று(7) வியாழக்கிழமை இரண்டு வருட கால கடூழிய சிறைத் தன்னை விதிக்கப்பட்டது. அக்கரைப்பற்று நீதவான் எம் எச் எம். ஹம்சா இத்தண்டனையை விதித்தார்.