தொழில் முனைவோர் கலாச்சாரத்திற்குள் ஈர்க்கும் திட்டத்தின் செயலமர்வு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இலங்கை கைத்தொழில்
அபிவிருத்தி சபை கல்வியமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து  மேற்கொள்ளப்படும் பாடசாலை மாணவர்களை எதிர்காலத்தில் தொழில் முனைவோர் கலாச்சாரத்திற்குள் ஈர்க்கும் திட்டத்தின் செயலமர்வு
பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொழில் முனைவோர் கலாச்சாரத்தையும் தொழில் முனைவோர் மனநிலையையும் மேம்படுத்துதல், பொது மக்களை தொழில் முயற்சியை நோக்கி ஈர்க்க முயற்சித்தல் ,தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் மாணவராக இருப்பதன் மூலம் எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழில் முனைவோராக்கல்,தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய முயற்சி மேற்கொள்ளல், வேலைவாய்ப்பை உருவாக்குபவரை பாடசாலை மூலம் சமூகத்திற்கு கொண்டுவரல், சவால்களுக்கு பதிலளிக்கக்கூடிய வர்த்தக வாய்ப்பாக மாற்றக்கூடிய
இலங்கையரை உருவாக்கல், பாடசாலை தொழில் முனைவோர் வட்டங்களை ஏற்படுத்துதல் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடி, அதிபர் தி.பார்த்திபன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் செயலமர்வொன்று( 6 )இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் மைக்கல் நிரோஸன்,
கைத்தொழில் அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர்  கெளசல்யா ஸ்ரீகாந்தன், கைத்தொழில் அபிவிருத்தி திணைக்கள விரிவாக்கல் உத்தியோஸ்தர் என்.கோகுலதாஸ் ஆகியோருடன் வளவாளராக திரு.குணாலனும் கலந்து கொண்டனர்.