நீர்கொழும்பு போரூதொட்ட ஹனிபி சர்வதேச பாலர் பாடசாலையின் முதலாவது கலை விழா மற்றும் சிறுவர் பட்டமளிப்பு பாடசாலையின் அதிபர் மற்றும் ஸ்தாபகராகிய ஃபஸ்நா ஃபாகிம் அவர்களின் வழிகாட்டலில் முகாமைத்துவ இயக்குனரான பவுசான் சருப்தீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னால் மேல் மாகாண சபை உறுப்பினரான எம்.எஸ்.எம் ஸகாவுள்ளா, Malaysian universal college நிர்வாகியான கலாநிதி சப்ரீனா பாரிஸ் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை மாணவர்களின் மேடை நடன நிகழ்வுகள் வினோத உடை நிகழ்வு மற்றும் பட்டமளிப்பு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.
இப்ப பாடசாலை முதலாவது வருடமே 30 மாணவர்களையும் ஐந்து ஆசிரியர்களையும் உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் மரியா மோன்டசூரியை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகிறது. கல்வியை மாத்திரம் கற்பிக்காது சிறுவர்களின் திறமைகளை அடையாளம் காண்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.