உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்திய பரிசோதனை.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் ஏற்பாட்டில்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி ஆகிய பரிசோதனைகள்  (05) திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இப்பரிசோதனையில் 125 இற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், தலைமை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.