தேசிய, மாகாண, வலயமட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் கெளரவிப்பு.

(எம்.எம்.ஜெஸ்மின்)  அண்மையில் இடம்பெற்று முடிந்த தேசிய மட்ட சமூக விஞ்ஞான வினா விடை போட்டி, மாகாணமட்ட மனையியல் பொருளியியல் வினாடி வினா போட்டி, ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி, இலங்கை பாடசாலைகள் சதுரங்க அணி போட்டி, விஞ்ஞான வினாடி வினா போட்டி,  வலய மட்ட இரண்டாம் தேசிய மொழி சிங்கள மதிப்பீட்டு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளை வாழ்த்தி வரவேற்கும்  கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் பொது காலை ஆராதனை ௯ட்டத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சாதனை மாணவிகள் பாடசாலை முன்றலில் பூ மாலை  அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டதுடன் வெற்றி பதக்கங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிபர், பிரதி, உதவி அதிபர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பொறுப்பாசிரியர்கள் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
மாகாண மட்ட சதுரங்க போட்டியில் 17 வயதுக்குட்பட்ட நிகழ்சியில் மஹ்மூத் மாணவிகள் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.