கல்முனையில் உலக பாரிசவாத தின நிகழ்வு!  விழிப்புணர்வு நாடகம் களைகட்டியது.

( வி.ரி.சகாதேவராஜா) உலக பாரிசவாத  தினத்தினை  முன்னிட்டு  கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக பாரிசவாத தின நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
வைத்தியசாலை  பணிப்பாளர் வைத்திய கலாநிதி  இரா. முரளீஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. வைத்தியசாலை  பொது வைத்திய  நிபுணர் டாக்டர். எம்.என்.எம். சுவைப்மின் ஏற்பாட்டில்  பாரிசவாத பிரிவு உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உதவியோடு  வைத்தியசாலையின்  கேட்போர்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக வரவேற்புரையினை  விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பாரிசவாத பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் ஜி.சோளவேந்தன்  வழங்கினார். தொடர்ந்து டாக்டர் எம்ஏஏ. சுஜாவினால் பாரிசவாத நோய் தொடர்பான விளக்கவுரை நடைபெற்றது.
 தொடர்ந்து வைத்தியசாலையின்  பொது வைத்திய நிபுணர் டாக்டர் சுவைப் அவர்களினால் பாரிசவாத நோய் நிலைமை பற்றிய  சிறப்புரை இடம்பெற்றது.
 தொடர்ந்து பாரிசவாத பிரிவு உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் பாரிசவாத நோயில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினரையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுடன் கூடிய நாடகமும் அரங்கேற்றப்பட்டது. பலராலும் நாடகம் வியந்து பாராட்டப்பட்டது.
 இந்நிகழ்வில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் பி. பிரேமினி, இதயவியல் நிபுணர் டாக்டர்.எஸ். கசுன் துஷியந்த லொகுகெடகொட, தாதிய பரிபாலகர் திரு. என். சசிதரன், தாதிய பரிபாலகி  திருமதி. எல். சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள்,  வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 நீரிழிவு முகாமைத்துவ தடுப்பு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி.கே. மனோஜினி  நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியினை திட்டமிடல் பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்  பி.செல்வகுமார் தொகுத்து வழங்கியிருந்தார்.