(அஸ்ஹர் இப்றாஹிம்) கேகாலை ,மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் கல்லூரி அதிபர் ஏ .எல் அப்துல் ரஹ்மான் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது,இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றுக்கான நியமனம்பெற்ற,இக் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவ ஆசிரியர்களான எம். எப். எம். இஜாஸ், திருமதி எம். என். ஆகிலா பானு,திருமதி எம். என். எஸ்.சாஹிரா ஆகியோர் அதிபர் மற்றும் பழைய மாணவியர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் எம். ஜே. எப். யமீனா ஆகியோரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.