(அபு அலா ) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் கடந்த 9 வருடங்கள் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற (திருமதி) சிவவதனா நவேந்திரராஜா மற்றும் 7 வருடங்கள் கடமையாற்றி பதவியுயர்வு பெற்றுச்சென்ற (திருமதி) வை.கார்த்திகா ஆகியோரின் சேவைகளைப் பாராட்டிய நிகழ்வு இன்று மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இணைந்துகொண்டு, அவர்களின் அர்ப்பணிப்புடனான சேவைகளைப் பாராட்டிய பரிசுகளையும் வழங்கி கெளரவித்தனர்.