(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு தரவை மீவீரர் இல்லத்தில் நினைவேந்லில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (4) உத்தரவிட்டார்.
கடந்த் நவம்பர் மாதம் 27 ம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர். ஒலி பெருக்கியை என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பினர்.இதன் போது சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளரும் முனனால் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நிதர்சன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி காஞ்சிநிதி, ஒலிபெரிக்கி உரிமையாளரான 43 வயதுடைய பிரான்சிஸ் அன்ரனி நியூட்டன் , அவரது மகனான 19 வயதுடைய நியூட்டன் சதுர்சன், வாகனசாரதியான 33 வயதுடைய சண்முகநாதன் நவஜீவன் ஆகிய 4 பேரையும் தடைசெய்யப்பட்ட புலிகளின் பாடல் ஒலிபரப்பு செய்தமை பெயர் பொறித்த பனர் வைத்திருந்தடை போன்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வாழைச்சேனை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் நவம்பர் 28 நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை டிசம்பர் 4ம் திகதிவரை விளக்கமறியல் வைக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 18 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.