இப் படைப்பிரிவின் பிரிகேடியர் அசித்த புஸ்பகுமாரவின் எற்பாட்டில் உன்னிச்சை கமுனுவொட்ச் பிரிவினரினால் இவ் கருத்தரங்கு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் நோக்கமாகக் கொண்டு இக் கருத்தரக்கு மேற்கொள்ளப்படுகின்றது.
இப் பாடசாலையில் வணிகப் பிரிவு மற்றும் கலைப்பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஜயங்களை தெளிவூட்டும் ஒரு சிறந்த களமாக அமையவுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிலத்த பிரேமரத்ன எதிர்காலத்தில் மாணவர்களிடையே கல்வி சார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதுடன் வெலி கந்தையில் உள்ள சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியையும், தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும் கற்பதற்கு வழிவகை செய்துள்ளதுடன், மேலும் இப் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்று இப் பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு கல்வி வலய பிரதி பணிப்பாளர் என்.குகதாசன்,பாடசாலையின் அதிபர் திருமதி சகிலா ஜெயக்குமார், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வி. ஜீவானந்தன், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவிகளினால் கண்கவர் நடனம் இடம் பெற்றதுடன் அதிதிகளினால் மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.