வாஸ் கூஞ்ஞ) 05.12.2023
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக மன்னார் ஆண்டான்குளம் பாடசாலையின் விசேட தேவையுடைய மாணவர்களின் பயிற்சி வள நிலையத்தில் ‘மாற்றுத்திறனாளிகளுடனும் மாற்றுத் திறனாளிகளாலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மீட்டெடுக்கவும் அடையவுமான செயற்பாடுகளில் ஐக்கியமாதல்’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வானது செவ்வாய் கிழமை (05) காலையில் நடைபெற்றது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மெதடிஸ்த திருச்சபையால் இயங்கி வரும் ‘டெப்பிலிங்’ நிறுவனமானது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தனது வேலைத் திட்டங்களை நடாத்திக் கொண்டு வருகின்றதில் ஒன்றாக 2023 ஆம் ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை அனுஷ்டித்தது.
இந் நிறுவனத்த்pன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.என்.நிமால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது மாற்றுத்திறனாளிகளுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மீட்டெடுக்கவும் அடைவுமான செய்ற்பாடுகளில் ‘ஐக்கியமாதல்’ என்ற தொனிப்பொருளிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.யோகேஸ்குமார் , ; ‘டெப்பிலிங்’ நிறுவனத்தின் அனுராதபுரம் மற்றும் மன்னார் திட்ட இணைப்பாளர் செல்வி ஜே.பியூலா , மாந்தை மேற்கு பிரதேச முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.சந்திரிக்கா மற்றும் ஆண்டாங்குளம் பாடசாலை பிரதி அதிபர் கே.மகேந்திரன் , மாற்றுத்திறனாளியான ஆசிரியர் செல்வி பெனடிக்ற் அவர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகளான மாணவ , மாணவியரின் மற்றும் பெரியோரின் பாடல் , பேச்சு . நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்
கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ‘டெவ்லிங்’ நிறுவனத்தால் அன்பளிப்பகளும் வழங்கி வைக்கப்பட்டன.