ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் தாமர குமாரி பண்டார 6 பதக்கங்கள் வென்று சாதனை.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   பிலிப்பைன்ஸ், நியூ கிளாக் சிற்றி மைதானத்தில் இடம்பெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் தாமர குமாரி பண்டார மூன்று தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், இரண்டு வெண்கலப்பதக்கங்களையும்  வென்றுள்ளார்.
நீளம் பாய்தல், 4×100 மீற்றர் அஞ்சலோட்டம், 4×400 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களையும், 400  மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 100  மீற்றர் ஓட்டம் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.