அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல்விழா.

( வி.ரி. சகாதேவராஜா)  அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழா
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க   அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்  தலைமையில் நேற்றுமுன்தினம்  (2) சனிக்கிழமை காரைதீவு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
திருமுன்னிலை அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் கலந்து கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார்.
பிரதம அதிதியாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார்.
அவர் தமிழிலே உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார்.
 கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்  எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர்  சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்   சோ. ஸுரநுதன், சம்மாந்துறை உதவி கல்விப் பணிப்பாளர்களான பூ. பரமதயாளன்,.வி.ரி. சகாதேவராஜா, ஆசிரியர் சி. சிவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
 அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும் அம்பாறை மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேலும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் 121 இந்து சமய அறநெறி பாடசாலைகள் உள்ளன. அங்கு 9842 மாணவர்கள் கல்வி பயின்று  வருகின்றனர். 575ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த போட்டிக்கு 296 மாணவர்கள் நேற்று முன்தினம் பரிசுகளை பெற்றுக் கொண்டார்கள். சிறந்த 16 ஆசிரியர்கள் 10 சிறந்த பாடசாலைகளுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.