(எம்.ஏ.ஏ.அக்தார்) இனங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்பும் வகையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க கலாச்சார நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் யெகராஜன் தலைமையில் காரைதீவு. இராம கிருஷ்ணன் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், சிறுவர் மகளிர் நன்நடத்தை பிரிவு உத்தியோகத்தர்கள் , காரைதீவு,மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச மாணவர்களும் கலந்து கொண்டனர் .
அதிதிகளினால் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.