(அஷ்ரப் ஏ சமத்)
பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் போன்ற சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த 61வயதுடையவர் குணசிங்கபுரவில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தியிருந்தார் அவரை குற்றத்தடுப்பு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
மேற்படி நபர் பாரியளவில் பாலியல் நடத்தைகளுக்கு பயன்படுத்தப்படும் இம் மருந்து வகையில் இந்தியாவில் இருந்து கொண்டு வந்து கொழும்பு 12 சில்வா சுஜித் குருக்குத் தெருவில் முகவரியில் உள்ள வீடொன்றில் களஞ்சிப்படுத்தியிருந்தார்.
பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மேல்மாகாணம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் புத்திக்க ராஜபக்ச (உ.பொ.அலுவலகர்) கிடைத்த தகவல்கள் அடிப்படையில் மேற்படி குற்றம் தடுக்கப்பட்டதாக தெரிவித்தார்