மட்டு சிறையில் எனது கணவர் சக கைதிகளால் அடித்து கொலை நீதிவேண்டும்

துரைராஜாவின் மனைவியார் கோரிக்கை

(கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட எனது கணவர் ஏனைய சிறை கைதிகளால் அடித்து கொலை செய்துள்ளனர் எனவே எனது கணவரின் கொலை செய்தவர்கள் இதுவரையம் கைது செய்யப்படவில் எனக்கு நீதிவேண்டும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக கொலை செய்யப்பட்ட சோமசுந்தரம் துரைராஜாவின் மனைவியார் தெரிவித்தார்

எனது கணவர் கசிப்பு அருந்துவதுடன் மீன் மற்றம் கருவாடு விற்பளை செய்துவருபவர் எனக்கு 3 பிள்ளைகள் இந்த நிலையில் கசிப்பு தொடர்பான  வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் கணவன் ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதிமன்ற பிடிவிறாந்து இருந்துள்ள நிலையில்  கடந்த நவம்பர் 22ம் திகதி கைது செய்த கொக்கட்டிச் சோலை பொலிசார் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தி பிணை எடுக்க நாங்கள் செல்லமுடியாதகாரணத்தால் அவரை பிணை எடுக்க யாரும் இல்லாது விளக்கமறியல் வைத்தனர்.

இந்த நிலையில் 27 ம்திகதி செவ்வாய்க்கிழமை கணவரை சிறைச்சாலையில் பார்வையிடுவதற்கு சமைத்து சோறு எடுது;துக் கொண்டு நானும் எனது மகளும் சென்ற நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சுமார் 30 நிமிடத்தின் பின்னர் உங்களது கணவன் சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது எனது கணவரை பிரோத அறையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றேன் அவர் மீது கால் கை, தலை, நெஞ்சு பகுதியில் அடிக்கப்பட்ட காயம் இருப்பதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்து பிரேத பரிசோதனையின் பின்னர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை சடலத்தை தந்தார்கள் அப்போது பொலிசார் தெரிவித்தனர் எனது கணவன் மீது பொல்லால் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக

அவருடன் அந்த சிறைக் கூடத்தில் 8 கைதிகள் இருந்துள்ளனர் அவர்களுக்கு தெரியும் யார் எனது கணவனை அடித்து கொலை செய்தது என கணவருக்கு எந்த வருத்தமும் இல்லை அவர் கசிப்பு அருந்துவது மட்டும் தான் எனவே கணவரை கொலை செய்தவர்களை நீதியின் முன்னர் நிறுத்தவேண்டும்

சிறையிலேயே பாதுகாப்பு இல்லை ஆகவே கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறைச்சாலை காவலர்கள் பொறுப்பு கூறவேண்டும் அவர்களுக்கு எதிரா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளேன் பொலிசார் பக்கசார்பற்ற விசாரணை வேண்டும் என அவர் தெரிவித்தார்.