(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மறைமாவட்டத்தின் கீழியன்குடியிருப்பு பங்கின் பாதுகாவலராம் புனித சவேரியாரின் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (03) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பங்குத் தந்தை அருட்பணி லோறன்ஸ் லியோன் அடிகளாரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் திருப்பலியானது பேசாலை பங்குத் தந்தை அருட்பணி அன்ரன் அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இக் கூட்டுத்திருப்பலியில் அருட்பணி எஸ்.ஜெஸ்மன்ராஜ் அடிகளார் , அருட்பணி எஸ்.அருண்தாஸ் குரூஸ் அடிகளார் ஆகபியோர் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.
திருப்பலி முடிவில் திருச்வுரூபம் புனிதரின் அசீர்க்காக பவனியாக வெளியில் ஏடுத்துச் செல்லப்பட்டு திருச்சுரூப ஆசீரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.