மதிவேந்தன் தாவரவியல்  பேராசிரியராக பதவியுயர்வு.

( வி.ரி.சகாதேவராஜா)   கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் தாவரவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு மண்ணைச் சேர்ந்த மதிவேந்தன் காரைதீவில் பயின்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2000 ஆண்டு விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.
 பின்னர் 2007 இல் நோர்வே நாட்டிலே விஞ்ஞான முதுமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் 2013 கலாநிதி (PhD) பட்டத்தை பெற்றார்.
தற்போது (30.11.2023)தாவரவியல் துறை பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார் .
இப் பதவி 2021 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரபல தமிழ் ஆசிரியர் பொன்.தவநாயகம் அவர்களின் புத்திரராவார்.