கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால்  நன்கொடை.

( வி.ரி.சகாதேவராஜா)  கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடை வழங்கியுள்ளது.
 வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும்,  நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள்  என்பன வழங்கப்பட்டது.
ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி  இரா. முரளீஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான எல்.பிரதீப்காந்த் அவர்களினால்  வைத்தியசாலையின்  கேட்போர்கூடத்தில் வைத்து  நேற்று காலை கையளிக்கப்பட்டது.
 மேலும் இந்த நன்கொடை கையளிக்கும்  நிகழ்வில் வைத்தியசாலை நீரிழிவு முகாமைத்துவ வைத்தியர் டாக்டர் கே. ரிஷிகேஸ், தாதிய பரிபாலகர் என். சசிதரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், திருமதி. கே. மனோஜினி (நீரிழிவு முகாமைத்துவ தடுப்பு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.