மன்னார் பொது வைத்தியசாலைக்கு நிதி உதவி பெற்றுத் தரப்படும் இந்திய உயர் ஸ்தானிகர் உறுதிமொழி.

( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பொது வைத்தியசாலைக்கு தேவையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவதற்கான நிதி  மற்றும்  சீரி ஸ்கேனரைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவிகளை பெற்றுத் தருவதில் கவனம் செலுத்தப்படும் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார் என மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டு சென்றபின் . மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான கே காதர் மஸ்தான் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர்; மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

புதன்கிழமை (29) வந்த இவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் போன்றவற்றை கேட்டறிந்தனர்.

இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்த்pய கலாநிதி எட்வேட் புஸ்பகாந்தன் அவர்கள் வைத்தியசாலையின் நாளாந்த நடவடிக்கைகள் நாளாந்த சேவைப் பரப்பக்கள் மற்றும் வைத்தியசாலையின் தேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இதன்போது வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவதற்கான நிதி உதவி மற்றும்  சீரி ஸ்கேனரைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவி தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதுவர் நேர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தினார். அத்துடன் இதற்கான விண்ணப்பம் தனக்கு எற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்

இதன் கட்டமைப்பு வரைபுகள் தொடர்பாக மீண்டும் ஆராயப்பட வேண்டியிருப்பதால்  இது சுகாதார அமைச்சுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது மீண்டும் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதும் சாதகமான முடிவை அறிவிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இவ் வைதத்pயசாலையில் குறைந்தளவு அதிகாரிகள் பணியாளர்கள் இருக்கின்றபோதும் நிறைவான சேவையை இந்த பிரதேச மக்களுக்கு வழங்குவதையிட்டு தான் மகிழச்சி அடைவதாகவும் தெரிவித்தார் என இவ்வாறு தெரிவித்தார்.