குருநாகல் நெடுஞ்சாலையில் மகிந்தவுக்கு ஏற்பட்ட விபத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பயணித்த ஜீப் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் யக்கஹாபிட்டிய வெளியேறும் போது, சீட்டு கவுன்டரின் தடுப்பு ஜீப் மீது விழுந்து சேதமடைந்தது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (28ம் திகதி) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில்  மகிந்த ராஜபக்ச பயணித்த சொகுசு ஜீப்பின் முன்பக்க கண்ணாடி மற்றும் வாகனம் சேதமடைந்துள்ளன.  மகிந்த ராஜபக்சவும் , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அனுராதபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் குருநாகல் யக்கஹாபிட்டிய வெளியேறு வழியாகச் சென்றனர் .

பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ஆகியவை வெளியேறும் வாயிலைக் கடந்தவுடன், டிக்கெட் கவுன்டரில் இருந்த ஊழியர், அங்குள்ள தடையை இறக்கிவிட்டதனால், மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனத்தின் முன்பகுதியில் மோதி உடைந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர் பொலிஸ் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலைகளில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் பணிபுரியும் சில ஊழியர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.