மன்னாரில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது.

(வாஸ் கூஞ்ஞ) இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஒரு பெண் கேரள கஞ்சாவுடன் கைது இச்சம்பவம் செவ்வாய் கிழமை (28) பேசாலை பொலிஸ் பிரிவில் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் ஒரு வீட்டை சுற்றிவளைப்பில் அவ்வீட்டை சோதனையிட்டபோது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்பப் பெண கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இந்த பெண் நீண்டகாலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபர் பெண்ணும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இப் பெண்ணை சட்ட நடவடிக்கைக்காக புதன்கிழமை (29) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஐராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்
அத்துடன் இது தொடர்பாக ஒருவர் தேடப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்