(ஹஸ்பர்) “முதியோர்களுக்கான தேசிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ” ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் செயற்றிறனான முதுமைப்பருவம்”எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது இன்று (28) திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பட்டினமும் சூழலும், கிண்ணியா, மூதூர், தம்பலகாமம் போன்ற பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 50-60 வயதுக்குட்பட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அரச ஊழியர்கள் ஏதாவதொரு நாள் ஓய்வு பெற வேண்டும். அவர்களின் ஓய்வு காலத்தை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் கொண்டு செல்ல இன்றிலிருந்து திட்டமிட வேண்டும். அதற்காக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பெற்ற அறிவை தமது ஓய்வு காலத்தை திட்டமிடுவதற்கு ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்த வேண்டுமென்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இதன் போது உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், எ.எல்.எம்.இர்பான் திருகோணமலை பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடாதிபதி அனவர்தன், வைத்திய அத்தியட்சகர் Dr. நிரஞ்சன், மருத்துவ உத்தியோகத்தர் Dr.திருமதி வைகலை, மருத்துவ உத்தியோகத்தர் Dr.மோகனசந்திரன், திருமதி Dr. செனவிரத்ன மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.