சம்மாந்துறையில் காணி அளிப்பு மற்றும் உத்தரவுப் பத்திரங்கள்  வழங்கி வைப்பு.

( சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)    சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 97 க்கும் மேற்பட்ட காணி அளிப்பு மற்றும் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு   சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபா  தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(28) நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, கெளரவ அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டதோடு அம்பாறை மாவட்ட மாகாணங்களுக்கிடைப்பட்ட காணி ஆணையாளர் இஸ்திகார் பானு மற்றும் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் ஆகியோர் கலந்து கொண்டு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தனர்.
மேலும்  கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  எம்.எல்.தாசிம், சம்மாந்துறை பிரதேச செயலக தலைமை காணி உத்தியோகத்தர் டி.கே.எம். ஜவாஹிர் மற்றும் காணிஉத்தியோகத்தர்லாபீர் காணிப் பிரிவின் ஏனைய உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், நிலஅளவை திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலாளரின் முயற்சியில் சுமார் 1500க்கு மேற்பட்ட அளிப்பு மற்றும் உத்தரவுப் பத்திரங்கள் இந்த வருடத்தில் இதுவரை சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.