க.ருத்திரன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் கிரான் தரவை ஆகிய பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் கல்ந்து கொள்வதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் உட்பட 42 பேருக்கு விதிக்கப்பட்ட தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டது.வாகரை கண்டலடியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம்,கிரான் தரவையிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு 42 பேருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை உத்தரவை குறித்த பிரதேச பொலிசார் பெற்றிருந்தனர்.இந்த தடை உத்தரவிற்கு எதிராக 42 பேர் சார்பாக சட்டத்தரணி ச.ஜெயசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்வைத்த இடை நகர்த்தல் பத்திரம் இன்று வாழைச்சேனை நீதிவான் நீதி மன்றில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.இதன்போது சில நிபந்தனைகள் முன்வைத்ததுடன் அதிலும் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தினை மீள் உருவாக்கம் செய்வதனை தூண்டும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளாததுடன் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் விளக்கு வைக்கலாம் என என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி ச.ஜெயசிங்கம் தெரிவித்தார்