“மட்டு முயற்சியாண்மை – 2023” பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “மட்டு முயற்சியாண்மை – 2023” உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியானது இன்று (27) பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரினால்  சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெறுமதி சேர் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான  ஆலோசனைகள், மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.இப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சிறு தொழில் முயற்சியாளர்களினால்  கூடாரங்களில் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு,  இக் கண்காட்சியில் கலந்து கொண்டோரினால் பெருமளவான உற்பத்திப் பொருட்ளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை  காணக்கூடியதாக இருந்தது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்களான சியாஹூல்ஹக், திருமதி.பிரசந்தன்  லக்சண்யா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி கணேசமூர்த்தி ஜெயராஜினி மற்றும் திருமதி சி.பிரணவசோதி, மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான  தே.கிருஷ்ணவேணிபிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.