( வி.ரி.சகாதேவராஜா) திருக்கார்த்திகை விளக்கீடு விழாவையொட்டி
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் விசேட பூஜையும் பூரணை மகாயாகமும் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது .
முன்னதாக கோமாதா பூஜை இடம்பெற்றது.
திருக்கார்த்திகையை ஒட்டி 210 சித்தர்களை எழுந்தருளச் செய்யும் விசேட பௌர்ணமி மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் மத்தியில் இடம் பெற்ற யாகத்தை தொடர்ந்து விசேட பூஜை இடம்பெற்றது. இறுதியில் அன்னதானமும் நடைபெற்றது.