பொதுவான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொது மக்களை ஈடுபடுத்த வேண்டாம். சிவகரனுக்கு கட்டளை.

( வாஸ் கூஞ்ஞ) இறந்த எல்ரிரி உறுப்பினர்களின் நினைவேந்தல் தினத்தினை கொண்டாடுவதால் சட்டரீதியான கடமையில் ஈடுபடும் நபர்களிற்கு இடையூறு மற்றும் சந்தேகம் , தொந்தரவு மற்றும் பாதிப்பு ஏறபட வாய்ப்பு உள்ளதாக பொலிசாரால அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆகவே பொதுவான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொது மக்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வீ.எஸ்.சிவகரனுக்கு கட்டளைப் பிறப்பித்துள்ளது.

அடம்பன் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட இல 29 ஆட்காட்டிவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவுற்கு உட்பட்ட பரப்புக்கடந்தான் எல்ரிரி மயானத்திற்குள் மற்றும் விடத்தில்தீவு மீனவர் சங்கத்திற்கு அருகாமையில் 2023.11.26 மற்றும் 2023.11.27 ம் திகதிகளில் இறந்த எல்ரிரி உறுப்பினர்களின் நினைவேந்தல் தினத்தினை நாள் பூராக கொண்டாட இருப்பதால் இந்த இயக்கத்தின் சின்னங்கள் கொடிகள் பதாதைகள் குறியீடுகள் சிகப்பு மற்றும் மஞ்சள் கலந்த கொடிகள் போடப்படுதல் மற்றும் சுத்தம் செய்து ஆய்த்தமாவது தொடர்பான தகவலினை நீதிமன்றுக்கு அடம்பன் பொலிசார் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

இந்த செயற்பாட காரணமாக மீண்டும் சமாதான முறையில் வாழும் தமிழ் மக்களிற்கு இடையில் பயம் மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுவதற்காக சந்தர்ப்பம் மற்றும் இனங்களுக்கு இடையில் வேறுபாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும்

இந்த மாவீரர் தின கொண்டாட்டம் செய்யப்படும் போது இனங்களுக்கிடையே மீண்டும் பயங்கரவாத செயற்பாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென பயம் மற்றும் சந்தேகம் உள்ளது என்றும்

சட்டரீதியான கடமையில் ஈடுபடும் நபர்களிற்கு இடையூறு மற்றும் சந்தேகம் , தொந்தரவு மற்றும் பாதிப்பு ஏறபட வாய்ப்பு உள்ளது என்றும் மன்றில் பொலிசாரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஆகவே பொதுவான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொது மக்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் வீ.எஸ்.சிவகரனுக்கு மன்னார் பதில் நீதவானின் கையொப்பதுடன் கட்டளைப் பிறப்பிக்கப்;பட்டுள்ளது.