வன்சபால நாரசிங்க அவுஸ்திரேலிய மாஸ்டர் விளையாட்டுப் போட்டியில் சர்வதேச சாதனை.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 80 வயதிற்கும் 90 வயதிற்கும் இடைப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கிடையிலான 19 வது அவுஸ்திரேலிய மாஸ்டர் விளையாட்டுப் போட்டியில் கண்டியைச் சேர்ந்த வன்சபால நாரசிங்க இரண்டு தங்கம்,இரண்டு வெள்ளி வென்று சாதனை படைத்ததுள்ளார்.
5000 மீற்றர் ஓட்டம்,2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம் ( steeplechase) ஆகியவற்றில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களையும், 800 மீற்றர் ஓட்டம்,1500  மீற்றர் ஓட்டம் என்பனவற்றில் இரண்டாம் இடங்களைப் பெற்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டார்.