ரெலோ தலைவரும் நா. உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு-
(கனகராசா சரவணன்)
இந்த சிங்கள தேசத்தின் அடக்கு முறைக்கு எதிராக தான் ஆயுத போராட்டம் தொடங்கியது இந்த அடக்குமுறை நெருக்குதல்களை கொடுக்கின்ற போது அடக்கு முறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள் இப்போது போர் துப்பாக்கி சத்தங்கள் இல்லையே ஒழிய அதேபோல் சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவே மண்ணுக்காக உயிர்தியாகம் செய்கின்ற அத்தனைபேருக்கும் நாங்கள் செய்கின்ற கைமாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என நா. உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்
மட்டக்களப்பிலுள்ள நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) ரோலே கட்சியின் 11 தேசிய மாநாடு பற்றிய கட்சி உறுப்பினரளுக்கிடையு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அடக்குமுறை தொடர்ச்சிய இருந்துவருகின்றது இப்போது எங்களுடைய மக்கள் பட்டினிசாவை எதிர் நோக்கியுள்ள சூழலிலேஇப்போது நடைபெறுகின்ற நிலங்களாக இருக்கட்டும் இப்படி ஒட்டுமொத்த பல திணைக்களங்களை வைத்துக் கொண்டு எங்களுடை தேசத்தில் புத்தகோயில்களை கட்டுவதும் பறவைகள் சரணாலயம் அமைக்க நிலங்களை அபகிப்பதும்
தென்னிலங்கையில் இருந்து எங்கள் பகுதியிலுள்ள கடலிலே வருகின்ற மீனவர்கள் சட்டத்துக்கு புறம்பான வலைகளை கொண்டுவந்து மிக மோசமான செயல்பாடுகளி செய்துவருகின்றனர் இவ்வாறு ஒவ்வொரு விடையத்திலும் எங்களுடைய பிரதேசம் பறி போகின்றது.
அடக்குமுறை என்பது நாங்கள் எதிர்பார்த்தது அந்தவகையில் எங்களுடைய மக்கள் நிச்சயமாக கிழந்தொழுவார்கள் நகுலேஸ் கைது செய்யப்பட்டார் அவர் செய்த தவறு என்னடிவன்று பார்க்கின்றபோது மாவீரர் பெற்றோரை கௌரவித்ததுதான் அவர் செய்த தவறு பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவரை கைது செய்து ஏற்று; கொள்ள முடியாது இதனை கண்டிக்கின்றோம்.
அந்த அடிப்படையில் நாளை நடைபெறுகின்ற மாவீரர் தின நினைவேந்தல் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடக்க நினைக்கின்றனர் நாங்கள் இதை எதிர்;பார்கவேண்டும் ஆனால் பின்நோக்கி போக முடியாது மக்கள் கிழந்தொழுவார்கள் அதற்கான ஆதரவு செயற்பாட்டை நாங்கள் செய்வோம்.
போர் முடிந்துவிட்டது சகல விடையங்களை செய்யமுடியும் என எதிர்பார்க்கமுடியாது போர் துப்பாக்கி சத்தங்கள் இல்லையே ஒழிய அதேபோல் சூழலில் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் ஆகவே இதனை எதிர்பார்த்து எதிர்த்து செயற்படுகின்ற மண்ணுக்காக உயிர்தியாகம் செய்கின்ற அத்தனைபேருக்கும் நாங்கள் செய்கின்ற கைமாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆகவே இந்த விடையத்தில் நாங்கள் பின்னோக்கி போக முடியாது என்றார்