மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 208 மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று(2023.11.25) முனைக்காடு உக்டா பண்ணையில் இடம் பெற்றது.
2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
அறிவாலயம் அறக்கட்டளை அமைப்பானது கடந்த 10 வருடங்களாக இச்செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது மொத்தமாக 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் ஜோ ஜெயச்சந்திரன் வலய பிரதி கல்வி பணிப்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சி யோகேஸ்வரன் பாடசாலை அதிபர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்கள்மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது சமூகத்தை கல்வியால் மட்டுமே கட்டி எழுப்ப முடியும் என்பதனை மகுடவாசமாக கொண்டு அறிவாலயம் அறக்கட்டளை நிறுவனமானது கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.
இதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றமை எடுத்துக்காட்டுத்தக்கது.