ஜீவிதன் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவு உட்பட்ட முனைக்காடு கிராமத்தில்வசிக்கும் சிதம்பரநாதன் ஜீவிதன் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

சமூக செயற்பாட்டாளரும்கிராம சேவை உத்தியோகஸ்தருமான இவர் பல்வேறு சமூகமட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார்.

அண்மையில் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இலங்கை முழு தீவுக்குமான சமாதான நீதவனாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கல்வி ஆன்மீகம் விளையாட்டு போன்ற துறைகளில் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றார்