காத்தான்குடியில் பிரபல போதை பொருள் பெண் வியாபாரி கைது

கனகராசா சரவணன் )

காததான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல போதை பெண் வியாபாரி ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (24) மாலை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதை பொருளை மீட்டு ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய உதவி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஷகி தலைமையிலான பொலிசார்  சம்பவதினமான  நேற்று மாலை குறித்த போதை பொருள் வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் போதை வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதை பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.