(அஸ்ஹர் இப்றாஹிம்) கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக சுப்ரமணியம் கரன் பதவியேற்பு.
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக சுப்ரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய தனது கடமையினை கடந்த புதன்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிருவாக சேவையில் முதலாம் தர அதிகாரியான இவர் ஏற்கனவே ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, வாகரை பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது அவர் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.