மாற்றுத் திறனாளிகளை 2024ம் ஆண்டுக்கான தொழில் பயிற்சி.

(ஹஸ்பர்)    மாற்றுத் திறனாளிகளை வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டுக்கான மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை திருகோணமலை மாவட்ட செயலகத்தில்  (23) இடம் பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் குறித்த தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பாடநெறிகளை கற்பதற்கான ஒரு வாய்ப்பாக காணப்படுகிறது. தையல் பயிற்சி, இயந்திர தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடநெறிகளை கற்பதற்காக இவ் நேர்முகத்தேர்வு இடம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு உட்பட தேசிய மட்டங்டளில் ஏனைய மாவட்டங்களிலும் இவ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் த.பிரணவன், தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரிகள்,சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.