மட்டக்களப்பில் ரணில் 2024 செயலணி நிதியின் ஊடாக புலமைப்பரிசில் திட்டம்

ரணில் 2024 செயலணி நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வங்கிக்கணக்கில் 10ஆயிரம் ரூபா நிதி வைப்பிலிட்டு மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு புத்தகம் கையளிக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்திட்டத்தின் ஆரம்பநிகழ்வு இன்று  பட்டிருப்பு வலயத்தில் உள்ள செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் பாடசாலை மட்ட மாணவர் அவைத்தலைவர் மோகன் டிலோஜன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உட்பட பல்வேறு அதிதிகளும் கலந்து கொண்டனர்.