( வாஸ் கூஞ்ஞ) சர்வதேச கடலில் இல்லாத வளங்கள் எமது மன்னார் கடற் பிராந்தியத்திலேயே காணப்படுகின்றது இது மன்னாருக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் இறைவனின் ஆசீர்வாதமாகும் இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமே உள்ளது என மன்னார் மெசிடோ பணிப்பாளர் யே.யாட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இத்தினம் மன்னாரில் செவ்வாய்க்கிழமை (21) மன்னார் நகர சபை மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மெசிடோ பணிப்பாளர் யே.யாட்சன் பிகிராடோ தொடர்ந்து உரையாற்றுகையில்
சர்வதேச மீனவர் தினம் உலகம் பூராகவும் கொண்டாடும் இவ்வேளையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் உலக மீனவர் தினத்தை கொண்டாடுவதையிட்டு பெருமைக் கொள்ளுகின்றது.
வடக்கு மாகாணம் பூராகவும் தேசிய பொருளாதாரத்தில் பங்காற்றிக் கொண்டு இருக்கும் வட மாகாணம் மீனவர்களை நாம் இந்நேரத்தில் வாழ்த்தி நிற்கின்றோம்.
மீனவர்களின் பலமே இந்த நாட்டின் முதுகெழும்பாகவும் இருக்கின்றது.
2015 ஈஎஸ்பிளஸ் வரி நிறுத்தப்பட்டிருந்த பொழுது அப்பொழுதுதான் புரிந்து கொண்டார்கள் நாட்டின் மீனவர்களின் பெறுமதியை.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் மீனவர்களின் பங்களிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது. ஆகவே மீனவர் தினத்தை நாம் கொண்டாடுவதில் பெருமை அடைய வேண்டும்.
யுத்தத்துக்குப் பின் வட பகுதி மீனவர்கள் நாளாந்தம் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பொருளாதார பிரச்சனைகளாக இருக்கலாம் , வளச் சுரண்டலாக இருக்கலாம் , வள அழிவுகளாக இருக்கலாம் , கொள்ளைகளாக இருக்கலாம் இவ்வாறு பல விடயங்களைத் தாண்டியே இம் மீனவர்கள் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் வளர்ச்சியாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான மெசிடோ நிறுவனம் 2010 லிருந்து கைகொடுத்து உதவுகின்றது.
எமது மூதாதையர்கள் எம்மிடம் விட்டுச் சென்ற வளங்களை நாம் பாதுகாப்பதில் அக்கறைக் கொண்டவர்களாக திகழ வேண்டும்.
சர்வதேச அறிக்கையின்படி மூன்றில் இரண்டு பங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இடமாக இருக்கின்றது. சர்வதேச கடலில் இல்லாத வளங்கள் எமது மன்னார் கடற் பிராந்தியத்திலேயே காணப்படுகின்றது.
இது மன்னாருக்கு கிடைக்க்பபெற்ற மாபெரும் இறைவனின் ஆசீர்வாதமாகும்.
இந்த இயற்கை வளத்தை மன்னார் மீனவர்களிடம் இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆகவே இந்த இயற்கை வளத்தையும் வளங்களையும் நாம் பேணி பாதுகாக்க வேண்டும்.
ஆகவே நாம் சட்ட ரீதியான மீன் பிடிக்கான கடல் உபகரணங்களை பாவிக்க வேண்டும் என்பதை நாம் மறக்கலாகாது.
ஆனால் நாம் மீன் பிடியில் சட்ட விரோதமான செயல்பாட்டிலேயே செயல்படுகின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.