கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியின்  ஸஹிரியன் மாஸ்டர் சதுரங்க சம்பியன்சிப் -2023.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்முனை சாஹிறா கல்லூரியின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற ஸஹிரியன் மாஸ்டர் சதுரங்க  சம்பியன்சிப் (ZAHIRIAN MASTER CHESS CHAMPIONSHIP – 2023 )நிகழ்வுகள் அண்மையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் இவ்வாறான அழைப்பின்‌ மூலமாக அதிக 450 போட்டியாளர்கள்கள் கலந்து கொண்டனர்.
ஸாஹிறா தேசிய கல்லூரி அதிபர்  எம்.ஐ.ஜாபிர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரபல சமூக சேவையாளரும், தொழிலதிபரும், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகருமான பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர்  என்.எம்.அப்துல் மலிக் கலந்து சிறப்பித்ததோடு உதவி அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை  அபிவிருத்திக் குழு, பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.