வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு. 

(அஸ்ஹர் இப்றாஹிம்)   சமூக சேவை திணைக்களத்தின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் நிகழ்வு அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான புன்னகை மையம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வில் சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் அனோஜா ,ஜெயிகா சர்வதேச தன்னார்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி யமடா ரெட்யூடா உட்பட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.