பத்திரிகையில் வெளியான செய்திக்கு உடன் நடவடிக்கை; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு.

(அபு அலா)   திருகோணமலை மாவட்ட கோபாலபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் கடந்த பல மாதங்களாக யாரும்  கவனிப்பாரற்ற நிலைமையில் காணப்பட்டு வந்தது தொடர்பில், வெளியான செய்தியையடுத்து குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பஸ் தரிப்பிடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், கடந்த வாரம் வெளியான செய்தி பற்றி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு வந்ததையடுத்து, குச்சவெளி பிரதேச சபையிக்குட்பட்ட அனைத்து பஸ் தரிப்பிடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த உத்தரவுக்கமைவாகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி எழுதிய ஊடகவியலாளர் மற்றும் அந்தச் செய்தியை பத்திரிகையில் பிரசுரித்த பத்திரிகை நிறுவனத்திற்கும் வெளிவந்த செய்தி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கையினை எடுத்த குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.முபாறக் ஆகியோர்களுக்கு பொதுமக்களும், பிரயாணிகளும் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.