இளைஞர் யுவதிகளுக்கான  தலைமைத்துவ பயிற்சி பட்டறை.

(நூருல் ஹுதா உமர்)  மனித மேம்பாட்டு அமைப்பு மற்றும் முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் தன்நம்பிக்கையுள்ள இளைஞர் , யுவதிகளினை உருவாக்கல் எனும் தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு இளைஞர்களுக்கான தலைமைத்துவ மற்றும் தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.
அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் அவர்களின் ஆலோசனையிலும்,
மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் மாவடிப்பள்ளி YMMA யின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் அவர்களின் வழிகாட்டலிலும் தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி
நிலையத்தின் பொறுப்பதிகாரியான, Lt Col. எம். எச். எம்.ரவூப் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது.
 இந்நிகழ்வில் , இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்ட விரிவுரைகளும் பயிற்சிகளும், பல களச் செயற்பாடுகளும் நிகழ்வினை வழுவூட்ட செய்திருந்தன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை YMMA பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம். பாரூக், நிலையத்தின் முன்னாள்  நிலையப் பொறுப்பதிகாரி Major கே. எம். தமீம் ஆகியோர் கலந்துகொண்டு  பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவித்தனர்.