(முஹம்மட் ஹாசில்) அண்மையில் வெளியான 2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி கெப்பித்திகொள்ளவ கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம் இஷாக் தெரிவித்துள்ளார்.
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அல்மாஸ் மஹா வித்தியாலயம் கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலாம் இடத்தையும், அனுராதபுர மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.அத்துடன் கடந்த பல ஆண்டுகளாக இப்பாடசாலை மாணவர்கள் பல சாதனையை நிலை நிறுத்தி வருவதாகவும் இம்முறை இச்சாதனைகளுக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக், பொறுப்பாசிரியர்களான ஏ.ஆர் யாசீர், எம். பெனோரிஷா, பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர் அமைப்பு மற்றும் நலன் விரும்பிகள், கல்வித்துறை சார் அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் ஏ.எம்.இஷாக் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சித்தியடைந்த மாணவர்கள் வருமாறு; என்.ஹுஸ்னா (170), ஆர். ரிப்தா (165) எம்.எம்.ஏ முயீஸ் (163) ஏ.எச். அன்ஹா (152), ஆர்.எம் ஹஸ்ஸான் (151), ஏ.எஸ் ஹுசைன் (149), எம்.ஆர் ராசிக் (148), எம்.ஆர் ருகையா (148), எம் .எம் முபீத் (147), எம்.ஜே.எம் ருஸ்தி (146), ஏ.எப் அஸ்ரா (143)