சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளராக நசீர் நியமனம் .

( வி.ரி. சகாதேவராஜா)  சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஏ. நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப். ஏ. நசீர் ஏலவே வலயத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளராக சிறப்பாக சேவையாற்றி வந்தவராவார்.
அவருக்கான நியமன கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா நேற்று (20) திங்கட்கிழமை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
 அச்சமயம் பிரதி கல்விப் பணிப்பாளர்களான அரபாத் மொகைடீன் மற்றும்  திருமதி நிரோபரா ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
ஏலவே சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளராக இருந்த எம்.ஜனோபர்  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப் பதவி வெற்றிடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.